​9 ஆயிரம் கோடி மதிப்பிலான சூரிய மின்சக்தி திட்டங்கள் கையெழுத்து!

Sep 27, 17

தமிழகத்தில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள 16 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களில் 1500 மெகாவாட் சூரிய மின்சக்தி கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகத்தில் 1500 மெகாவாட் திறனுள்ள சூரிய மின்சக்தி நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுடன் திறந்தவெளி ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டதாகவும்,  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ,தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்துடன் என்.எல்.சி. இந்தியா லிமிடெட், இராசி கிரீன் எர்த் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், உள்ளிட்ட நிறுவனங்கள் சூரிய சக்தி மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.