15 வருடத்தில் 100 விமான நிலையங்கள்.. மோடி அரசின் அடுத்த அதிரடி திட்டம்..!

Nov 06, 17

15 வருடத்தில் 100 விமான நிலையங்கள்.. மோடி அரசின் அடுத்த அதிரடி திட்டம்..!

இந்திய சந்தையில் தற்போது அதிக வாடிக்கையாளர்கள் மற்றும் விமானச் சேவையில் முன்னணியில் இருப்பது இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய தனியார் நிறுவனங்கள் மட்டுமே. நாட்டில் பெரு நகரங்களைச் சிறு நிறுவனங்களின் வாயிலாக இணைக்கும் திட்டத்திற்காகத் தனியார் நிறுவனங்கள் 100க்கும் அதிகமான சிறிய ரக விமானங்களை வாங்குகிறது.  

2,500 ரூபாய் திட்டம்.. மேலும் மத்திய அரசின் 2,500 ரூபாய் விமானப் பயணத் திட்டம் மக்கள் மத்தியில் விமானச் சேவைக்குக் கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என நம்பப்பட்ட நிலையில் தான் மத்திய அரசு புல்லட் ரயில் திட்டத்தை அறிவித்தது. இந்தியா முழுவதையும் விமானம் மூலம் இணைக்கத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு எதற்காக 1.1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் புல்லட் ரயில் அமைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.