17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அழகிக்குப் பட்டம்!

Nov 20, 17

பீய்ஜிங் : ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் 2017ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெண் ஒருவர் இந்தப் பட்டத்தை பெற்றுள்ளார்.

108 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்ற உலக அழகி போட்டி தெற்கு சீனாவின் சான்யா நகரில் நடைபெற்றது. இதில் இன்று வெற்றி பெற்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 20 வயது மனுஷி சில்லார் 2017ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை பெற்றதையடுத்து அவருக்கு மகுடம் சூட்டப்பட்டது. மருத்துவ மாணவியான மனுஷி ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். இவரின் பெற்றோர் மருத்துவர்கள். மனுஷியின் தந்தை டாக்டர் மித்ரா பாசு சில்லார் டிஆர்டிஓவில் விஞ்ஞானியாக உள்ளார். இவரின் தாய் டாக்டர் நீலம் சில்லார் நியூரோ ஹெமிஸ்ட்ரி துறையின் பேராசிரியர்.