2018 ஜனவரி முதல் ‘ஹால்மார்க்’ தங்கம் கட்டாயம்?!

Nov 09, 17

பொதுமக்கள் வாங்கும் தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில், கடைகளில் விற்கப்படும் நகைகளில், தங்கத்தின் தரம் குறித்த, 'ஹால்மார்க்' முத்திரை இடம் பெறுவது கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், மக்கள் வாங்கும் தங்கத்தின் தரத்தை உறுதி செய்வது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். 

மேலும் அனைத்து நகை கடைகளிலும், ஹால்மார்க் முத்திரையிட்ட நகைகளை மட்டுமே, விற்பனை செய்ய வேண்டும் என்ற நடைமுறையை, 2018 ஜனவரிக்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவும் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.