ஜாக்கிசானை கவர்ந்த கபாலி படத்தின் போஸ்டர் அடங்கிய டீ -ஷர்ட்டுடன் காட்சி அளிக்கிறார்

May 30, 16

ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படம் 2014-ல் வந்தது. தற்போது இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு அவரது ‘கபாலி’ படம் வெளிவருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னை, மலேசியா, பாங்காக் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது. சமீபத்தில் இதற்கு ரஜினிகாந்த் டப்பிங் பேசி முடித்தார்.

ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படம் 2014-ல் வந்தது. தற்போது இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு அவரது ‘கபாலி’ படம் வெளிவருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னை, மலேசியா, பாங்காக் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது. சமீபத்தில் இதற்கு ரஜினிகாந்த் டப்பிங் பேசி முடித்தார்.

மே 1-ந்தேதி இதன் ‘டீசர்’ ‘யூடியூப்’பில் வெளியிடப்பட்டு அதில் இடம் பெற்ற நெருப்புடா என்ற பாடல் வரியும் ரஜினி தன்னை கபாலிடா என்று வில்லனிடம் அறிமுகம் செய்யும் வசனமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இந்த படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாடல் வெளியீட்டு விழாவை சென்னையிலும், மலேசியாவிலும் நடத்தலாமா? என்று படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயண் இசையமைத்துள்ளார். பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர்-நடிகைகள் மற்றும் ரஜினி ரசிகர்கள் பங்கேற்க உள்ளனர்.

‘கபாலி’ தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்தி, மலாய் ஆகிய மேலும் இரண்டு மொழிகளிலும் படத்தை வெளியிடுகின்றனர். கபாலி படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது ரஜினியை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான மலேசிய மக்கள் திரண்டனர்.

அந்த நாட்டின் கவர்னர் மற்றும் அதிகாரிகள் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள். ரஜினிக்கு மலேசியாவில் கிடைத்த வரவேற்பு படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியது. எனவேதான் மலாய் மொழியிலும் கபாலியை வெளியிடுகிறார்கள்.

கபாலி படத்தின் டீசர்.ஸ்டைல் மற்றும் போஸ்டர்கள்  அனைவரையும் கவர்ந்து உள்ளது. இந்த தாக்கம்  உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானையும் விட்டு வைக்கவில்லை.

கபாலி படத்தின் போஸ்டர் அடங்கிய டீ -ஷர்ட்டுடன் ஜாக்கிசான் நிற்பது போன்ற ஒரு புகைப்படம் சமீக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்த புகைபடத்தில் ஜாக்கிசான் தான் அணிந்து இருக்கும் கபாலி டீசர்ட்டை சுட்டிகாட்டுவதுபோல் உள்ளது.