இயக்கத்திலும் நடிப்பிலும் வித்தகரான உதயபானு மகேஸ்வரன்...

May 30, 16

ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்ராஜ் நடிப்பில் நாளை மற்றும் சக்ரவியுகம் ஆகிய படங்களை இயக்கி தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் உதயபானு மகேஸ்வரன்.

  ளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்ராஜ் நடிப்பில் நாளை மற்றும் சக்ரவியுகம் ஆகிய படங்களை இயக்கி தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் உதயபானு மகேஸ்வரன்.

  பின்னர் நவீன் இயக்கத்தில் வெளியான "மூடர் கூடம்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் கவனத்தையும் ஈர்த்தார்.

  தனது தனித்தன்மையான நடிப்பினால் குறுகிய காலத்தில் ஜீவா, மாயா, எனக்குள் ஒருவன், 144 உள்ளிட்ட பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும் தனியார் தொலைகாட்சிக்காக சின்னத்திரை "ஆபிஸ்" தொடரில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமாகி பாராட்டப்பட்டது. சமீபத்தில் சிம்பு - நயன்தாரா நடிப்பில் வெளியான "இது நம்ம ஆளு" படத்தில் இவர் நயன்தாராவின் தந்தையாக நடித்துள்ளார். இவரது அனுபவமிக்க நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது.

  தனக்கென்று எந்தவோரு வளையத்திலும் சிக்கிக்கொள்ளாமல் அனைத்து தரப்பட்ட சவாலான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்ட உதயபானு மகேஸ்வரன் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் கபாலி படத்தில் மலேசியா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.