50 லட்சம் ரூபாயை கடத்தல்காரர்கள் பேரம்பேசி பறித்துச் சென்ற வீடியோ காட்சிகள்

Jan 26, 18

வாணியம்பாடியில் பள்ளி தளாளரை கடத்திய விவகாரம், மீட்கச் சென்ற போலீசாரின் முன்னிலையில் பேரம்

வாணியம்பாடியில் பள்ளி தளாளரை கடத்திய விவகாரம், மீட்கச் சென்ற போலீசாரின் முன்னிலையில் 50 லட்சம் ரூபாயை கடத்தல்காரர்கள் பேரம்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பள்ளி தளாளரை கடத்திய விவகாரத்தில், மீட்கச் சென்ற போலீசாரின் முன்னிலையிலேயே 50 லட்சம் ரூபாயை கடத்தல்காரர்கள் பேரம்பேசி பறித்துச் சென்ற வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளரான செந்தில் குமார், கடந்த 19ஆம் அதிகாலை உடற்பயிற்சி செய்ய வெளியே சென்ற போது மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட செந்தில்குமாரின் செல்போனில் இருந்து அவரது அண்ணன் உதயசந்தரைத் தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல், ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளது. பணத்துடன் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்திற்கு உதயசந்தரை வரவழைத்த கடத்தல் கும்பல், அவரிடம் பேசி போலீசாரின் முன்னிலையிலேயே சாதுர்யமாக பணத்தை பறித்துக் கொண்டு செந்தில்குமாரை விடுவித்தது. கடத்தல் கும்பல் பணத்தைப் பெற்றுச் சென்று ஒரு வாரத்திற்கு மேலாகியும், அவர்களைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில் உதயசந்தரிடம் இருந்து 50 லட்சம் ரூபாயை கடத்தல்காரர்கள் பேரம்பேசி பறித்துச் சென்ற காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

பனிக்குல்லா அணிந்த கடத்தல்காரன், தாளாளர் செந்திகுமாரின் சகோதரர் உதயச்சந்தருடன் வாதம் செய்யும் காட்சிகளும், போலீசார் முன்னிலையிலேயே கடத்தல்காரன் பணத்தை பறித்து செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.