தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக 15-வது முறையாக சீனிவாசன் மீண்டும் தேர்வு

Jun 25, 16

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக 15-வது முறையாக சீனிவாசன் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பதவி வகித்தவர் சீனிவாசன். ஐபிஎல் 6வது தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருந்த சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் பிக்ஸிங் புகாரில் சிக்கினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த சர்ச்சையில் சீனிவாசன் பெயரும் அடிபட்டது.