நான் இனிமேல் ஒலிம்பிக்கில் விளையாட மாட்டேன்.. அழுகிறார் சானியா மிர்ஸா

Aug 15, 16

ஒலிம்பிக்கில் ஒரு பதக்கமும் பெற முடியாமல் போய் விட்டதே என்ற வேதனையில் இருக்கிறார் சானியா மிர்ஸா. மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றமளித்தார் சானியா.

ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக்கில் ஒரு பதக்கமும் பெற முடியாமல் போய் விட்டதே என்ற வேதனையில் இருக்கிறார் சானியா மிர்ஸா. மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றமளித்தார் சானியா. கலப்பு இரட்டையரில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி வரை முன்னேறி அதில் தோல்வியுற்றார். இந்த நிலையில் இதுதான் தனக்கு கடைசி ஒலிம்பிக் போட்டி என்றும், 2020ல் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தான் ஆடப் போவதில்லை என்றும் சானியா அறிவித்துள்ளார். இந்த ஒலிம்பிக் போட்டி சானியாவுக்கு பல ஏமாற்றங்களை அளித்து விட்டது. இந்தப் போட்டித் தொடருக்கு நடுவேதான் அவரும் மார்ட்டினா ஹிங்கிஸும் பிரியும் செய்தியும் வந்து சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.