என்னைக் கட்டிக்கோயேன்.. மெடல் வழங்கும் மேடையில் புரபோஸ் செய்த சீன நீச்சல் வீரர்!

Aug 15, 16

சீனாவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவர், சக நாட்டு நீச்சல் வீராங்கனையிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியின்போது புரபோஸ் செய்து கலகலப்பை ஏற்படுத்தினார்.

ரியோ டி ஜெனீரோ: சீனாவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவர், சக நாட்டு நீச்சல் வீராங்கனையிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியின்போது புரபோஸ் செய்து கலகலப்பை ஏற்படுத்தினார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட்டு தவிர வேறு சில களேபரங்களும் அரங்கேறி கலகலப்பை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் பிரேசிலைச் சேர்ந்த ஒரு ஓரினச்சேர்க்கை ஜோடி தங்களது காதலை மைதானத்தில் வைத்து வெளிப்படையாக வெளிப்படுத்தியது.

இந்த நிலையில் சீனாவைச் சேர்ந்த நீச்சல் ஜோடி ஒன்று தங்களது காதலை மெடல் வழங்கும் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தி கலகலப்பாக்கியுள்ளது.